பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது.
இது குறித்து, புல்லரம்பாக்கம் வி. ஏ. ஓ. , பிரகாஷ் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.