சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

83பார்த்தது
சவுடு மண் லோடு டிப்பர் லாரிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி தட்டி கேட்ட கிராமத்தினரை லாரி ஓட்டுநர் தாக்கியதால் லாரிகள் சிறைபிடிப்பு


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் ஏரியில் சவ்வுடு மண் எடுத்துச் செல்லும் லாரிகளால் கிராம மக்கள் கடும் பாதிப்பு. இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் குறுகலான சாலையில் வழி விடாமல் சென்ற டிப்பர் லாரி ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஏற்பட்டது இதனால் தரக்குறைவாக லாரி ஓட்டுநர் கிராம மக்களிடம் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்து ஓட்டுனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சவுடு ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இதுபோன்று தகாத முறையில் லாரி ஓட்டுநர் நடந்து கொள்வதை தடுக்க வேண்டும் எனக்கு கிராம மக்கள் தெரிவித்து சமரசம் செய்ய வந்த காவல்துறையினர் மற்றும் சவுடுமண் குவாரி உரிமையாளர்களிடம் கிராமத்தினர் முறையிட்டனர். சவுடுமண் லோடுகளோடு நீண்ட வரிசையில் டிப்பர் லாரிகள் நின்றதால் தத்தமஞ்சி பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி