செங்குன்றம் போக்குவரத்து காவல் புலனாய்வு பிரிவு அலுவலகத்தை காவல் துணை ஆணையாளர் திறந்து வைத்தார்.
செங்குன்றம் போக்குவரத்து காவல் புலனாய்வு பிரிவு அலுவலகம் செங்குன்றம் பஜார் பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தின் மேல் மாடியில் புதியதாக திறக்கப்பட்டது.
செங்குன்றம் , மணலி , சோழவரம், காட்டூர் , மீஞ்சூர் உட்பட 14 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகன விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பந்தமாக இயங்கி வந்த மாதவரம் பால்பண்ணை பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம்
பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் இருந்த காரணத்தினால் அதனை ஆவடி காவல் ஆணையரக கமிஷனர் அதனை உடனடியாக சீரமைத்து மாற்றி அமைக்கும்படி உத்தரவிட்டதின் பேரில் , செங்குன்றம் பஜார் அருகே புதியதாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு முதலாவதாக கணபதிஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளை குருக்கள் செய்திருந்தார். இதனை ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து காவல்துறை ஆணையாளர் அன்பு, பூந்தமல்லி சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் பிராங்க்ளின் ரூபன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் செங்குன்றம் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தற்போது இதற்கான பணிகள் அனைத்தும் இன்று முதல் துவங்கப்படுகிறது.