திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் வெங்கட்ராஜகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வயது 15 இவர் வீட்டில் இதே ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
விவசாய பணிக்கு சென்ற இவர்களது பெற்றோர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி திரும்பி வந்து வீட்டில் பார்க்கும் பொழுது இவர்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்
விரைந்து வந்த போலீசார் இறந்து போன பெண்ணின் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
இவர் கடும் வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் இறந்து போன பெண்ணின் தந்தை ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார்
புகாரை பதிவு செய்து கொண்ட பள்ளிப்பட்டு போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இறந்து போன அரசு பள்ளி மாணவி 15 வயது இவரது பிரேதம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.