மலைக்குறவன் இன மக்கள் போராட்டம்.

880பார்த்தது
மலைக்குறவன் இன மக்கள் போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக மலைக்குறவன் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூடை, முறம் முடைதல், பன்றி வளர்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு இனச்சான்று இல்லை. இதனால் இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராததால் கல்வி, வேலை, உதவிதொகை என எந்த அரசு நல திட்ட உதவிகள் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மலைக்குறவர் சங்கத்தின் சார்பில் 2021 ஆண்டு கும்முடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனால் ஆத்துப்பாக்கம் மலைக்குறவர் இன கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடைகள் கூடை முடையும் கசங்குகள், கூடை முடையும் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களோடு குழந்தைகள் பெற்றோர் பெண்கள் என குடும்பமாக படை எடுத்தனர். பொன்னேரி காவல்துறையினர் தடுத்தும் வருவாய் கோட்ட அலுவலகம் முன்பு முற்றுகையிட்டார்கள். பின்பு கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி