பொன்னேரியில் , ஸ்ரீ நாகமல்லீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நந்தி சிலைக்கு, பால், தயிர், மஞ்சள், நெய், சந்தனம், தேன் என, 16 வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. மாலை, 6 மணியளவில், நாகமந்தீஸ்வரர் நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.