தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவக் கூடும் என சந்தேகிக்கும் இடங்களில் அவர்கள் சதி திட்டங்களை முறியடிக்கும் விதத்தில் இரண்டு நாள் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக திருவள்ளூர் மாவட்ட கடலோரப் பகுதியான பழவேற்காடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் விதத்தில் அவர்கள் ஊடுருவ கூடும் என சந்தேகிக்கும் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரி கரையோர கிராமங்களில் ஆரம்பித்து காட்டுப்பள்ளி எண்ணூர் முகத்துவாரம் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் இந்த ஒத்திகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை எல்லைக்குட்பட்ட பழவேற்காடு கடலோரப் பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹரிகுமார் தலைமையிலான
காவலர்களும் சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காட்டூர் பகுதிகளில் காவலர்களும் தமிழக கடலோர காவல் படை துணைக் துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையிலும் இன்ஸ்பெக்டர் நீலாவதி, உதவி ஆய்வாளர் சபாபதி ஆகியோருடனான காவல் படைவீரர்கள் காட்டுப்பள்ளி
அதானி துறைமுக பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரை மார்க்கமாக ஊடுருவ முயன்ற பாபின் பாலன், யோகேஷ் குமார், பாலமுருகன் ஆகியோர் காட்டுப்பள்ளி துறைமுக பகுதியில் பிடிபட்டனர்.