இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நுழைவாயில் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நுழைவாயில் முன்பாக நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மூன்று பேரை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏஎஸ் கண்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரரையும் காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
இதனால் அங்கு காவல்துறைக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பெட்ரோல் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.