பொன்னேரி: சாலையில் கற்களை கொட்டி மூடும் நெடுஞ்சாலை துறை

52பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது, அதற்காக சாலையின் நடுவே ராட்சத கழிவுநீர் தொட்டிகளை புதைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோன்றியதால் நகர் முழுவதும் உள்ள அனைத்து உள்கட்டமைப்பு சாலைகள் மட்டும் இன்றி அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளும் சேதம் அடைந்தன, இந்த நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை காரணம் கட்டுமான பணிகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பாதியில் நிறுத்திவிட்டது, பாதாள சாக்கடை திட்ட பணிகளின் குளறுபடி காரணமாக தற்போது தோண்டிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெறுவதால் சாலை பணியை மேற்கொள்ள முடியாமல் முடங்கி கிடப்பதாக நெடுஞ்சாலைத் துறை தரப்பில் கூறப்படுகிறது, இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கண மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் பள்ளம் இருப்பதை அறியாமல் அதனை கடந்து செல்ல முற்படும்போது, பள்ளத்தில் இருசக்கர ஊர்தி சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலர் காயம் அடைந்து வருகின்றனர், இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக ஜேசிபி எந்திரம் மூலம், சாலைகளில் உள்ள பள்ளங்களில் கற்களைக் கொட்டி மூடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி