திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இங்கு பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயராஜ் என்பவர் பெரும்பேடு அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாணவர்கள் காலையில் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியில் இருந்து சாலைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை சமரசம் செய்து பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியரை பெரும்பேடு அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்தது ஏன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியையுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையால் கடந்த எட்டு ஆண்டு காலமாக பணியாற்றி வந்த உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜ் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். பள்ளியின் தலைமை ஆசிரியை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரையும் ஒருமையில் தரக்குறைவாக பேசுவதாகவும் அப்போது மாணவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் பள்ளியில் புதர்மண்டி கிடப்பதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் மாணவர்கள் அப்போது குற்றம் சாட்டினர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.