பொன்னேரி: அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

58பார்த்தது
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மனித சங்கிலி போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அதிமுக அமைச்சர் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் பலராமன் முன்னிலையில் நடைபெற்றது.

திமுக கொள்ளையடித்த பணத்தில்
குடும்ப ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது
பத்திரிக்கை சோசியல் மீடியாவை
பணம் கொடுத்து
கையில் வைத்து கொண்டிருக்கிறார்கள்
துண்டு சீட்டு இல்லாமல் ஒரு மணி நேரம் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர் எடப்பாடி பழனிசாமி
கொள்ளைகார ஆட்சி நடக்கின்ற இக்காலத்தில்
பத்திரிகைகள் சோசியல் மீடியாக்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் மக்களிடம் அடிக்கின்ற கொள்ளை பணத்தில்
₹ஆயிரம் பணம் வழங்குகின்றார்கள்
அதிமுகவை சரிவிலிருந்து தடுக்க வேண்டும் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் எம்ஜிஆர் அம்மா குறித்து அனைத்து வீடுகளிலும் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் தமிழகத்தில் மற்ற தலைவர்களை காட்டிலும் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் திருமாவளவன் சீமான் விஜயை காட்டிலும் எடப்பாடி தான் சிறந்தவர் என்பதை தின்னைப் பிரச்சாரத்தில் வீடு வீடாக சென்று கூற வேண்டும்
தமிழ்நாட்டிற்கு ஒரு நன்மை கிடைக்கும் அதை நினைத்து அனைவரும் களப்பணியாற்ற வேண்டுமென பொன்னையன் கேட்டுக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி