வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

79பார்த்தது
திருவள்ளூர்

50 ஆண்டுகளாக வசிக்கும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்

திருவள்ளூர் மாவட்டம்
காட்டாவூர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய இரண்டு ஊராட்சிகளில்
50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசு உரிய முறையில் வீட்டுமனை பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி. பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்
வருவாய் தீர்வாயத்தில் வீட்டுமனை பட்டா வழங்கா கோரி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் தற்போது வரை தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என அங்கு வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம்
முறையிட்டதை தொடர்ந்து அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி