பழவேற்காடு: தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை

61பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள தாங்கள் பெரும்புலம் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமானஇறால் பண்ணையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த நிலையில் காவல் பணிக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றவர் மாயமானதாக அவரது மனைவி பவானி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் மாயமான அன்று அங்குள்ள பெட்டி கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு காவல் பணிக்கு சென்றதாகவும் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் காவல் பணிபுரிந்த இறால் பண்ணை இடத்தில் சிவராஜின் காலனி மற்றும் செல்போன் மட்டும் இருந்துள்ளது இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் இருவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் சிவராஜ்க்கும் தங்களுக்கும் பணப்பிரச்சனை இருந்ததால் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து இறால் பண்ணையில் உடலை மறைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காட்டூர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இறால் பண்ணையில் காவல் பணிக்கு சென்ற தொழிலாளி அங்கு பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்களால் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டு உடலை மறைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி