மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை நாசம்

54பார்த்தது
மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை நாசம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக பெய்த மழையில், பல்வேறு சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன. இதில், பூந்தமல்லி மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இச்சாலையில், மழைநீர் வடிகால் முறையாக துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், வடிகாலில் இருந்து மழைநீர் சாலையில் வெளியேறி தேங்குவது வாடிக்கை.

இந்நிலையில், மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அய்யப்பன்தாங்கல் அருகே, சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், கோடம்பாக்கம் மண்டலம், 130வது வார்டு வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில், கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மழையால் இச்சாலையும், சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

தொடர்புடைய செய்தி