மக்களுடன் முதல்வர் முகாமில் எம்எல்ஏ, சேர்மன் பங்கேற்பு.

53பார்த்தது
மக்களுடன் முதல்வர் முகாமில் எம்எல்ஏ, சேர்மன் பங்கேற்பு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட கூடுவாஞ்சேரி ஊராட்சி பரிக்கப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் வருவாய் துறை, மின்சார துறை, கால்நடை துறை, வட்டார வளர்ச்சி துறை, தோட்டக்கலை துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்துக்கொண்ட முகாமில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்துக்கொண்டு முகாமினை பார்வையிட்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்த முகாமில் கூடுவாஞ்சேரி ஏலியம்பேடு, காட்டாவூர், அரசூர் சோம்பட்டு கிளிகொடி ஏ. ரெட்டிபாளையம், பனப்பாக்கம், உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை, வீடுகளுக்கு இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை பெறுதல், மின் இணைப்பு பெறுதல், வேலைவாய்ப்பு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மனுக்கள் அளித்தனர் இந்த முகாமில் கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ராஜேஷ் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜமுனா ரஜினி, வெற்றி (எ) ராஜேஷ், காட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மங்கை உமாபதி, அரசூர் தலைவர் ஏழுமலை, ஏலியம்பேடு தலைவர் சுகனா, கிளிக்கொடி தலைவர் பழனி, சோம்பட்டு தலைவர் ராஜாராம், ஏ. ரெட்டிபாளையம் தலைவர் கவிதா மனோகரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி