சின்னம்பேடு அருள்மிகு ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது
யாக கலச பூஜைகளுடன் கலசநீர் மேல தாலங்கள் முழங்க
ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சந்தானம் பட்டாச்சாரியார் தலைமையில் கோபுர கலசங்களுக்கும் பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது
இதில் ஆரணி பெரியபாளையம் கும்மிடிப்பூண்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம்
வழங்கினர் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதேபோன்று
புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு
ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது