திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடல் உறுப்பு தானம் செய்த ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்த உமாச்சந்திரன் என்பவரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.