திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுனியம் பி பலராமன் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகளை வழங்கினார், அப்போது பேசிய அவர் நடிகர் விஜய் கட்சியில் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இதேபோன்று திமுகவில் உதயாநிதி தலைமையின் கீழ் இளைஞர் அணியில் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களாகவும், கிளைச் செயலாளர்களாகவும் இருக்கும்போது. 60 முதல் 80 வயது வரை உள்ள அதிமுக கிளை செயலாளர் தேர்தலுக்கு இன்னும் 10 மாதமே உள்ள நிலையில் 20 வயது உள்ள திமுக இளைஞருடன் 20 வயது உடைய விஜய் கட்சி இளைஞர் உடன் ஓடி ஆடி வேலை செய்ய முடியுமா? இது நடக்கிற காரியமா? முடியாது என்ற காரணத்தினால் தான். கட்சித் தலைமையும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து முடிவெடுத்து 45 வயதிற்கு உட்பட்டவர்களை கட்சிப் பொறுப்புகளில் நியமித்து வருவதாகவும், இதனால் எம்ஜிஆர் காலம் முதல் கட்சியில் பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.