மீஞ்சூரில் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி.

883பார்த்தது
மீஞ்சூரில் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சென்னை துறைமுக ஆணையம் எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் மீஞ்சூர் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரி இணைந்து நடத்திய ஊழல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. மீஞ்சூர் ரயில் நிலையத்தில் கூடி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கையில் ஊழலை தடுக்க வேண்டி எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி கைப்பிரதிகளை தயார் செய்து பேனர் அமைத்திருந்தனர். ஊழல் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை சென்னை துறைமுக ஆணைய சிவிஓ முரளி கிருஷ்ணா மற்றும் மீஞ்சூர் ஸ்ரீ சந்திர பிரபுவின் கல்லூரி முதல்வர் சுஜாதா ஆகியோர் பேசிய பின் இணைந்து பேரணியை துவக்கி வைத்து உடன் சென்றனர். பேரணியானது மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மீஞ்சூர் பஜாரில் வலம் வந்து மீண்டும் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் திட்ட அலுவலர் பேராசிரியர் முரளிதரன், காவல் ஆய்வாளர் பெருந்துறை செல்வன், சென்னை துறைமுக ஆணைய நிர்வாகிகள் செந்தில், பாலன், பாஸ்கரன், சுப்பிரமணி உள்ளிட்ட திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி