ஆரணியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு
சிவகாமவள்ளி உடனுரை சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று(செப்.8) நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் கலச நீரானது மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக
கொண்டுவரப்பட்டு ராஜகோபுரத்திற்கும், காலத்தீஸ்வரர், வள்ளி, முருகன், அண்ணாமலையார், கைலாசநாதர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது இதில் பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.