பொன்னேரி: ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

52பார்த்தது
பொன்னேரி ரயில் நிலையம் அருகே சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? தண்டவாளத்தைக் கடக்க முயன்றாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி