நாய் கடித்து 5பேர் மருத்துவமனையில் சிகிச்சை

1பார்த்தது
திருவள்ளூர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கு ஐந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் இரண்டு வயது சிறுமியை நாய் கடித்து இழுத்துச் சென்ற நிலையில் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது அதனைத் தொடர்ந்து ஆவடியில் நாய் கடிச்ச சம்பவம் நடைபெற்றது அதே சமயத்தில் தற்போது பொன்னேரி அருகே உள்ள மெதுர் கிராமத்தில் வெறிபிடித்த தெரு நாய் கடித்துக் குதறியது மேலும் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுவனையும் இளைஞர் ஒருவரையும் என ஐந்து பேரை நாய் கடித்ததால் அவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
திருவள்ளூர் நகராட்சி தொடர்ந்து பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களிலும் நாய் கடி தொல்லைக்கு ஆளாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் பிரச்சனையில் தலையிட்டு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி