42வது வணிகர் தின விழா மாநாடு: வணிக சங்க பேரவைத் தலைவர்

73பார்த்தது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தச்சூரில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதில் மாநில தலைவர் சௌந்தராஜன்
பொது செயலாளர்
மெஸ்மர்காந்த் வெள்ளையன் கலந்து கொண்டு மே 5ல் 42வது வணிகர் தின விழா மாநாடு தாம்பரம் படப்பை பகுதியில் நடைபெறுவதை ஒட்டி
வணிகர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர், வணிகர் சங்க பேரவை தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் அரசு உள்ளாட்சித் துறை மூலம் வணிக உரிமை கட்டணம் 650- 3500 ரூபாயாக உயர்த்தி பின்பு வணிகர் சங்க கோரிக்கையை ஏற்று பழைய கட்டணத்தை மீண்டும் மாற்றி அமைத்தார்கள் ஆனாலும் தமிழக அரசு அதிகாரிகள் எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ இந்த அளவுக்கு வசூல் செய்ய முயல்கிறார்கள் பொன்னேரி நகராட்சியில்
வணிக உரிமை கட்டணம் 3000 கட்ட நிர்பந்தம் செய்கிறார்கள ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியா முழுவதும் 2 லட்சம் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
மே 5ல் நடைபெறும்
வணிகர் தின மாநாட்டில் மத்திய மாநில அரசுகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள் இடம்பெறும் இதில் வைகோ திருமாவளவன் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் என தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி