வந்தால் முதலமைச்சராக தான் வருவேன் என நினைக்கிறார் விஜய்

72பார்த்தது
வந்தால் முதலமைச்சராக தான் வருவேன் என விஜய் நினைக்கிறார்: சைதை சாதிக் விமர்சனம்

மோடியை எடப்பாடி விஜய் விமர்சிக்க மாட்டார்: சைதை சாதிக்

மக்களை சந்திக்காமலே விஜய் முதல்வராக நினைக்கிறார்: சைதை சாதிக்

வந்தால் முதலமைச்சராக தான் வருவேன் எனவும் மக்களை சந்திக்காமலே முதலமைச்சர் ஆவேன் எனவும் நடிகர் விஜய் நினைப்பதாக திமுக பேச்சாளர் சைதை சாதிக் விமர்சித்தார்.

சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. திருவேற்காடு நகராட்சி தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் அமைச்சர் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய சைதை சாதிக், "சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளை வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் நடித்த ஹீரோதான் என்று சொல்வார்கள். அதுபோல கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகள் எல்லாம் வகிக்க மாட்டேன் வந்தால் முதலமைச்சர்தான் என்று நினைக்கிறார். கட்சி ஆரம்பித்துள்ள விஜய் மோடியை விமர்சிக்க மாட்டார், எடப்பாடியை விமர்சிக்க மாட்டார். வீட்டை விட்டு வெளியே வர மாட்டார், மக்களை சந்திக்க மாட்டார் ஆனால் ஆட்சிக்கு மட்டும் வந்து விடுவாராம்" என்று விமர்சனங்களை முன்வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி