வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட இரண்டு சரக்கு வாகனங்கள் பறிமுதல்

81பார்த்தது
தமிழக-ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் வரி  செலுத்தாமலும் மற்றும் அனுமதி சீட்டு பெறாமலும் இயக்கப்படும் பிற மாநில வாகனங்கள் குறித்து தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரத்தின் ஆணைக்கிணங்க சோதனை மேற்கொண்டதில், தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சரக்கு வாகனங்கள் தமிழ்நாட்டுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கியது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  மேலும் இந்த சோதனைச்சாவடியில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜூன் 2024 வரையிலான மூன்று மாத காலத்தில் அனுமதிச்சீட்டு விதி மீறல்கள் தொடர்பாக சுமார் 3514 வழக்குகள் பதியப்பட்டு ஒரு கோடியே 33 லட்ச ரூபாய் வரி மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி