ஆடித் திருவிழாவில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

63பார்த்தது
ஆடித் திருவிழாவில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
26 ஆம் ஆண்டு
அம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்


ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என முளைப்பாரி வைத்து
கும்மி அடித்து வழிபாடு



சென்னை மதுரவாயலில் ஸ்ரீ புவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 26 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா இந்த வாரம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலம், பூங்கரகம் புறப்பாடு, சமபந்தி போஜனம் என திருவிழா நிகழ்ச்சிகள் களைகட்டின. இடைத்தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல், முளைப்பாரி கும்மி அடித்தல் ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.

இந்நிலையில் இன்று பூங்கரகம் புறப்பாடு முளைப்பாரி புறப்பாடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிழாவில் மதுரவாயல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் அம்மன் பூங்கரகம் ஊர்வலம் வரும்போது ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.
மேலும் விழாவின்ஸமுக்கிய நிகழ்வாக
பெண்கள் விரதமிருத்து முளைப்பாரி வைத்து
கும்மி அடித்தனர் இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என அனைவரும் கலந்து கொண்டு கிராமங்களில் நடைபெறுவது போன்று சென்னைவாசிகள் கும்மி நடனம் ஆடி மகிச்சியுடன் திருவிழாவில் அம்மனை வழிபாடு செய்தனர்

தொடர்புடைய செய்தி