முகப்பேர்: தவற விட்ட நகை மீட்டுக் கொடுத்த காவல்துறை

85பார்த்தது
முகப்பேர்: தவற விட்ட நகை மீட்டுக் கொடுத்த காவல்துறை
முகப்பேர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (41) என்பவர், தனது மகளின் பள்ளி கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லாததால், மனைவியின் ஒரு சவரன் செயினை அடகு வைத்து பணம் பெறுவதற்கு சென்றுள்ளார். அடகு கடைக்கு சென்ற மகேஸ்வரன், பாக்கெட்டை சோதனை செய்தபோது தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

அவர் வந்த வழியில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து வீடு திரும்பிய மகேஷ்வரன், சங்கிலி தொலைந்தது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்தார். இதனால், குடும்பத்தினர் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். அப்போது, மகேஷ்வரன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசியவர், ''நான் நொளம்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பேசுகிறேன். உங்களது சங்கிலி ஏதும் தொலைந்து விட்டதா,'' என கேட்டுள்ளார். 

அதற்கு இவர் ஆமாம், என தெரிவித்துள்ளார். உடனே, ''தொலைந்து போன சங்கிலி கிடைத்து விட்டது. காவல் நிலையம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்,'' என இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். உடனே குடும்பத்துடன் நொளம்பூர் காவல் நிலையம் சென்று, இன்ஸ்பெக்டரை சந்தித்து, ''தொலைந்து போன சங்கிலி எப்படி கிடைத்தது,'' என்று கேட்டனர். அப்போது, முகப்பேர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42), பைக்கில் சென்றபோது கீழே தங்க சங்கிலி கிடைத்துள்ளது. அதை எங்களிடம் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி