திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோழவரம், அருமந்தை பகுதியைச் சேர்ந்தவர் வித்யா, 26; தனியார் மருத்துவமனை ஊழியர். இவர், நேற்று முன்தினம் ஸ்கூட்டரில், பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றார். ஸ்கூட்டரை சக ஊழியரான, வேளச்சேரியைச் சேர்ந்த மூர்த்தி, 27, என்பவர் ஓட்டினார்.
இருவரும் திரும்பி செல்லும்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலப்பன்சாவடி அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத டேங்கர் லாரி, ஸ்கூட்டரில் மோதியது. இதில், வித்யா படுகாயமடைந்தார். மூர்த்தி லேசான காயங்களுடன் தப்பினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வித்யா, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.