விருகம்பாக்கம், சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 57; புரசைவாக்கம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர். நேற்று முன்தினம் மாலை, இவரது மொபைல்போனுக்கு வங்கியில் இருந்து அனுப்பியது போல், குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், உடனடியாக ஆதார், பான்கார்டு இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு செயல்படாது என தகவல் இருந்துள்ளது. அதனுடன் ஒரு இணையதள, 'லிங்க்' இருந்துள்ளது. இளங்கோவன் அந்த 'லிங்க்'கை பயன்படுத்திய போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 30, 000 ரூபாய் மாயமானது. இதுகுறித்த புகாரின்படி, விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.