வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் நியூ காலனி இரண்டாவது பிரதான சாலையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இச்சாலையில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் தனியார் பள்ளி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அதன் மேல் மூடி வழியாக கழிவு நீர் கசிந்து சாலையில் வழிந்தோடியது.
இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், கழிவு நீர் குழாயில் மண் கசடுகளால் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் வெளியேறியது தெரியவந்தது.
இதையடுத்து, பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை குடிநீர் வாரிய ஊழியர்கள் சீர் செய்தனர்.