திருவள்ளுர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 6.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபு சங்கர், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கிருஷ்ணசாமி அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு. வை. ஜெயக்குமார் அவர்கள், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. ஜெயசீலி ஜெயபாலன் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.