பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருவள்ளூர் பழைய டோல்கேட் பகுதியில் உள்ள இக்தார் மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை. தொழுகை முடிந்த பின் சிறுவர்கள் பெரியவர்கள் என ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்
இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல் ஹஜ் மாதம் பத்தாம் நாள் பக்ரித் கொண்டாடப்படுகிறது இறைவன் கட்டளைக்காக மகனை பலியிடத் துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் பழைய டோல்கேட் பகுதியில் உள்ள இப்தார் மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்புத் தொழுகை செய்தனர் இதை அடுத்து ஒருவரை ஒருவர் ஆற கட்டி தழுவிக் கொண்டு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் கட்டித் தழுவி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்
இதேபோல் சிறுவர்களும் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்கள் கூறியது அனைவரிடத்திலும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது
இதேபோல் அனைத்து மதத்தினரும் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனும் அனைத்து மக்களும் சிறப்புடனும் நலமுடன் வாழ வேண்டுமென பிரார்த்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது