மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, வார்டு - 153, போரூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே. ராஜன், M. C. , மாமன்ற உறுப்பினர் சாந்தி இராமலிங்கம், M. C. , பகுதி துணை செயலாளர் இரா. பால்பாண்டியன், வட்ட கழக செயலாளர் தி. சார்லஸ், மாவட்ட பிரதிநிதி கோ. இராமலிங்கம், மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.