காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் நாடார் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் பின்னர் அவர் அளித்த பேட்டியில் உத்திரபிரதேசத்திற்கும் திட்டம் கொடுக்கவில்லை அங்கும் அதிகமான எம்பிக்களை கொடுத்துள்ளார்கள் நான் அரசியல் பேச விரும்பவில்லை பேச மறுக்கப்படும் என்பது முன்கூட்டியே அறிந்து தமிழக முதல்வர் கூட்டத்தை புறக்கணித்தார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத்திற்கு ஏதாவது கொடுத்துள்ளார்களா என்றால் ஏதுமில்லை
தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருவது குறித்து முதல்வரிடம் கேட்டு கொள்ளவும்
கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் அந்த குற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும் தமிழ்நாட்டில் எந்த குற்றங்கள் நடந்தாலும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எடுக்காமல் இருந்தால் தான் என் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்க வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர், எர்ணாவூர் நாராயணன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.