சென்னை நெற்குன்றத்தில் கவுன்சிலர் ஏற்பாடு செய்த இலவச கருத்தரித்தல் மையம்
சென்னை அதன் புறநகர் பகுதியில் கருத்தரித்தல் மையம் அதிகரித்து வரும் நிலையில் முதல் முறையாக கவுன்சிலர் ஒருவர் தன் சொந்த செலவில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம் அமைத்து கஸ்டப்படும் ஏழை எளிய தம்பதிகளுக்கு மருத்துவ உதவி பெற நிதி உதவியும் அளித்து வருகிறார். அதன்படி
சென்னை மாநகராட்சி நெற்குன்றம் 148 வது வார்டில் மாமன்ற கவுன்சிலர் V. V. கிரிதரன் அறக்கட்டளை சார்பில் இலவசமாக குழந்தையின்மைக்கான கருத்தரித்தல் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் பங்கேற்று சிறப்பு மருத்துவரிடம் குழந்தையின்மை குறித்த ஆலோசனைகளை பெற்றனர். மேலும் மருத்துவ உதவி பெற உள்ள தம்பதிக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கவும் அறக்கட்டளை சார்பில் நிதி உதவி செய்யவும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் ஆண்களுக்கு இலவச விந்தணு பரிசோதனையும் டைபெற்றது. தனியார் கருத்தரித்தல் மையங்கள் பெருகி வரும் நிலையில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் சாதராண ஏழை எளிய மக்களுக்கு இந்த ஆலோசனை முகாம் பெரு உதவியாக இருந்தாக பெண்கள் தெரிவித்தனர். இந்த இலவச முகாமை ஏற்ப்பாடு செய்த கவுன்சிலர் V. V. கிரிதரனுக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.