கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

63பார்த்தது
திருவள்ளூர் அருகே 12 அடி உறை கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர்.

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் சிமெண்ட் உறை கழிவு நீர் கிணற்றில்
தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு சென்ற பசு மாடு ஒன்று கால் தவறி
12 அடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் அளித்த தகவலுன்பேரில் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பொது மக்கள் உதவியுடன் கயிற்றின் மூலமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த மாட்டை மேலே பத்திரமாக மீட்கப்பட்டு மாட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். விரைந்து செயல்பட்டு பசு மாட்டை மீட்ட
தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி