திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் ஊராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நித்யானந்தம், 65. கூலி
வேலை செய்து வருகிறார்.
சில நாட்களாக வேலையில்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.