திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மும்முடிவாக்கம் கிராமத்தில் எஸ்சி, எஸ்டி பட்டியலினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லை என 30 ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் தனிப்பிரிவு எஸ்சி எஸ்டி ஆணையம் என பல வழிகளில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பங்கேற்ற கடம்பத்தூர் ஒன்றியம் மும்முடிவாக்கம் சமூக ஆர்வலர் கோபிநாத் என்ற இளைஞர் தங்கள் கிராமத்திற்கு விமான நிலையம் அமைத்துக் கொடுங்கள் அல்லது விண்வெளியில் உடலை அடக்கம் செய்ய இடம் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதற்கு வட்டாட்சியர் ரஜினிகாந்த் ராக்கெட் விமானம் வாங்கி விட்டீர்களா என்று நகைச்சுவையுடன் வினவினார்.
இந்த நிலையில் ஒரு வாரத்தில் சுடுகாடு நிலத்தை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார். இளைஞரிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ரஜினிகாந்த் அதை நகைச்சுவையாகப் பேசினாலும் கிராமமக்கள் நிலையை உணர்ந்து 2 மணி நேரத்தில் மும்முடிவாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று சுடுகாடு இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிப்பேடு வருவாய் ஆய்வாளர் உடன் ஈடுபட்டார்.