தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது : நடிகை சரண்யா

62பார்த்தது
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமே தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதுதான் என நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரண்யா, "உலக தாய்ப்பால் வாரத்தை கொண்டாடும் நிகழ்வுக்காக என்னை அழைத்தது பெருமையாக உள்ளது. உலகத் தாய்மார்கள் அனைவருக்கும் தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் முன்பு குறைந்து இருந்தாலும் தற்போது அது அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் உண்மையே இல்லை. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகும் கூடும், குழந்தைகளின் அழகும் கூடும். பெரும்பாலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தான். எனவே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் எனும் கொடுமையான நோயிலிருந்தும் தப்பிக்க முடியும்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி