மாதவரம் - Madhavaram

வல்லூர்: வேன் மோதி விபத்து - உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வல்லூர் செங்கம் பிள்ளை தெருவை சேர்ந்த பிரபு கடந்த 21ம் தேதி மாலை தனது வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் அத்திப்பட்டு புதுநகர் மேம்பாலம் அருகில் இவருக்கு பின்னால் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது, தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த பிரபு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய வேன் மற்றும் டிரைவரை தேடி விபத்து நடந்த சாலையில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் உறவினர்கள் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு மூன்று நாட்களாகியும் உடலை வாங்க மறுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்தால் ஒழிய உடலை வாங்க மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் தெரிவித்துள்ளனர். இதனால் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த பிரபுவிற்கு அபிராமி என்ற மனைவியும் மகள் மற்றும் மகன் அரசு பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా