இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் பிணமாக மீட்பு

80பார்த்தது
புழல் அடுத்த விநாயகபுரம் வீரராகவேலு நகர் 2வது தெருவில் சொந்த வீட்டில் வசிப்பவர் வேல்குமார் (வயது 54 ) இவர் செங்குன்றம் அருகே உள்ள வடகரை பகுதியில் உள்ள ரைஸ்மில் தெருவில் சென்னை பாரிமுனையை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குத்தகைக்கு ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார்.
அவருக்கு கவிதா (வயது 53) என்ற மனைவியும் 2மகள்களும் உள்ளனர். இந்நிலையில் வேல்குமார் தனது ரைஸ் மில்லில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை சரிகட்ட பலரிடம் சுமார் 80லட்சம் வரை பணம் வாங்கி உள்ளதாக தெரிகிறது.
வாங்கிய கடனை அடைக்க பல வழிகளில் போராடி வந்த நிலையில், தனக்கு தெரிந்த வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு வருகிறேன் என தனது மனைவிடம் சொல்லி கொண்டு தனது காரில் கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி வெளியூர் செல்கிறேன் என கூறி சென்றுள்ளார். ரைஸ் மில்லில் மின்சார விளக்குகள் இல்லாத காரணத்தினால் உரிமையாளர் மின் வாரிய ஊழியர்களை மின்சார இணைப்பு தர வரவழைத்துள்ளார், உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வேல்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்ததது. அழுகிய நிலையில் பாதி எலும்புகூடாகவும் பாதி தொங்கிக்கொண்டும் காட்சி அளித்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீசாருக்கு l அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி