மாதவரம் அருகே பான்பராக், குட்கா உள் ளிட்டதடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 35 கிலோ புகையிலைப் பொருள் களை பறிமுதல் செய்தனர்.
மாதவரம் சிஎம்டிஏ லாரி நிறுத் தத்தில் பான்பராக், குட்கா, மாவா உள்ளிட்ட பொருள்கள் விற் பனை செய்யப்படுவதாக மாதவ ரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாதவரம் காவல் நிலைய தனிப்படை போலீஸார் புதன்கிழமை குறிப்பிட்ட பகுதிக ளில் உள்ள கடைகளில்சோதனை செய்தனர்.
அப்போது ஜெயலட்சுமி (28) என்பவரின் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பி லான 35 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்களை பறி முதல் செய்த போலீஸார், அதை விற்பனை செய்த கடை உரிமை யாளர் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.