பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: உண்ணாவிரத போராட்டம்

81பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தேவந்தவக்கம் ஊராட்சிக்குட்பட்ட செங்குன்றம் கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவ்வழியாக பொதுமக்கள் வந்து செல்ல தடை விதித்து வருவதாகவும், இதுகுறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள தனி நபருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதோடு அந்த பொதுப்பாதையை அந்த நபரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆக்கிரமிப்பாளருக்கு துணைபோகும் அதிகாரிகளை கண்டித்தும் அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சர்ச்சைக்குரிய இடம் தனக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்ட தனிநபர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்ததாகவும் அதன் அடிப்படையில் வருவாய் அலுவலர்கள் நில அளவீடு செய்ய வந்ததாகவும் அளவீடு தொடர்பான அறிக்கை கோட்டாட்சியர் மூலம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பப்பட்டு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி