பேனா மூடியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி

75பார்த்தது
பேனா மூடியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி
புழல் மத்திய சிறையில் விசாரணை, மகளிர் மற்றும் தண்டனை என, 3, 000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, எண்ணுாரைச் சேர்ந்த பாபுலால், 35, என்பவர், ரயில்வே பொருட்களை திருடியதாக, சென்ட்ரல் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் பாபுலால், நேற்று பிளேடு துண்டு மற்றும் பேனா மூடி ஆகியவற்றை விழுங்கி, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கியவரை, சிறை அதிகாரிகள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி