சோழவரம் அருகே கிராமத்தில் 7 குளங்களை காணவில்லை என கூறி சமூக ஆர்வலர்கள் இருவர் ஊராட்சிமன்ற அலுவலக வாயிலில் தர்ணா
போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் 7 குளங்களை காணவில்லை என சமூக ஆர்வலர்கள் இருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதில் 7 குளங்கள் அடங்கும் எனவும், அவை காணவில்லை என வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் புகார் அளித்தும் இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர்கள் இருவர் பூதூர் ஊராட்சிமன்ற அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குளங்களை ஆக்கிரமிக்கும் தனிநபர்களுக்கு ஊராட்சிமன்ற நிர்வாகம் துணை போவதாக கூறி பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.