ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி கோவிலில் பால்குடம்

78பார்த்தது
மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி திருக்கோவிலில்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்து ‌ அபிஷேகம் செய்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்



திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் முன்னதாக கோவிலில் அறுபடை வீடு முருகன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டது இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி