திருவள்ளூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

58பார்த்தது
திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏ. சேகர் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் (பொ) ஜானகிராமன் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி மின் நுகர்வோர்களை வரவேற்றார். 

கூட்டத்திற்கு திருவள்ளூர் கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் சற்குணன், பாலச்சந்திரன், யுவராஜ், உதவி பொறியாளர்கள் ராணி, காஞ்சனா, லஷ்மி காந்தன், குமரகுரு, சரவணன், குமார் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்டு அறிந்தனர். 

இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு, கிராம சுற்றுவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு, 50 சென்ட் விவசாய நிலம் வைத்திருப்போர் இலவச மின்சாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஏ. சேகர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி