சேதமடைந்த அங்கன்வாடி மையம்

279பார்த்தது
சேதமடைந்த அங்கன்வாடி மையம்
மீஞ்சூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, 38 ஆண்டுகளான நிலையில், தற்போது, சேதமடைந்து உள்ளது.

மேலும், கட்டடத்தின் சுவர்களில், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும் வருகிறது. இதனால், கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த கட்டடம், இரண்டு முறை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், கட்டடம் உறுதியற்ற நிலையில் உள்ளது.

இதனால், கட்டடம் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், அங்கன்வாடி மையத்தில் உள்ள 16 குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, தற்போது, ஊராட்சி அலுவலக கட்டடத்தின் சிறிய இருப்பு அறையில் தஞ்சமடைந்து உள்ளனர்.

ஊராட்சி பொருட்கள் ஒருபுறமும், மறுபுறம் குழந்தைகளும் என, போதிய வசதிகள் இல்லாமலும், இடநெருக்கடியிலும் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

மேலும், குடியிருப்புகளின் அருகில் சேதமடைந்துள்ள பழைய அங்கன்வாடி மையம் கட்டடத்தால், குடியிருப்புவாசிகளும் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழைநீரால் கட்டடம் இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் நேரிட வாய்ப்பு உள்ளது.

எனவே, அங்கன்வாடி மைய கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி