திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில்வே மேம்பாலம் சாலையில் தொடர்ந்து அடிக்கடி பெய்யும் மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் வாகனங்கள் அதில் கடந்து செல்ல முடியாதபடி மழைநீர் சூழ்ந்து வாகனங்கள் பழுதாகி நின்று விடுவதுடன் தொடர்ந்து வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் மழையால் பாதிக்கப்படும் அப்பகுதியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அப்போது நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன்
சிறிய மழை பெய்தாலும் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுவதாகவும் மாவட்ட ஆட்சியர்களிடம் பலமுறை தெரிவித்தும் தெரிவித்தும் தீர்வு காணப்படவில்லை ரயில்வே துறையினர் பணிகள் செய்ய தடை செய்வதாகவும் தெரிவித்தார்
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள் என்று பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஆட்சியர் ரயில்வே துறை அதிகாரிகள் ஏதாவது கேட்டால் கலெக்டரிடம் பேசுங்கள் எனத் தெரிவியுங்கள் விரைந்து பணியை தொடங்கி மழை பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்தார்