பகுஜன் சமாஜ் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் வெள்ளானூர் வி. கே. வெங்கட் தலைமையில் செங்குன்றம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவரும், வடகரை ஊராட்சி மன்ற தலைவருமான நா. ஜானகிராமன், தேர்வாய் எல். சூர்யா, சந்தோஷ், மீரான்பாய், பகுஜன் பிரதீப், தீபக், ஜான் திலீப், புழல் மாறன், ரெட்ஹில்ஸ் ஜெனி, கதிர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பி. ஆனந்தன், மாநில நிர்வாகிகள் மைக்கேல் தாஸ், புழல் பெரியாரன்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தேர்வாய் லிங்கன், கிருபா, எஸ். தாஸ், நாகூர் அனிபா, குப்பன்ராஜ், ஜோதி, சோமு, ஆலன் மோசஸ், சிவா, சாந்தி, வடகரை மோகன், ஸ்ரீதர், இளையராஜா, அமர், சசி உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி, கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள், மகளிர் அணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரளாக கொண்டனர்.